7 மணி முடக்கத்தால் மார்க் இழந்த பணம் எவ்வளவு??

Webdunia
செவ்வாய், 5 அக்டோபர் 2021 (13:09 IST)
வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கியதால் மார்க் சக்கர்பெர்க் சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்தது.
 
உலகம் முழுவதும் செல்போன் பயனாளர்கள் வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென பேஸ்புக் நிறுவனத்தின் அனைத்து செயலிகளும் முடங்கியது. இதனால் பலரும் அதிர்ச்சியடைந்த நிலையில் இன்று காலை இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டது.
 
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம் எங்கள் பயன்பாடுகள் மற்றும் தயாரிப்புகளை அணுகுவதில் சிலருக்கு சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம். முடிந்தவரை விரைவாக இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம், மேலும் சிரமத்திற்கு மன்னிப்பு கோருகிறோம் என்று தெரிவித்துள்ளது.
 
சுமார் 7 மணி நேரத்திற்கு பிறகு இந்த கோளாறு சரி செய்யப்பட்டது. இதனால் மார்க் சக்கர்பெர்க் சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்தது.  சில மணி நேரங்களிலேயே 7 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பை மார்க் சந்தித்தார்.  இது இந்திய மதிப்பில் சுமார் 52 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்