அதனால் ஆராய்ச்சிக்காக சில ஆய்வாளர்கள் மட்டுமே அண்டார்டிகா சென்று தங்குகின்றனர். தென் துருவத்தில் அமைந்துள்ளதால் பூமியின் சாய்வு கோணத்தால் ஆண்டுதோறும் 4 மாதங்கள் அண்டார்டிகா இருளில் மூழ்கி விடும். இந்த நான்கு மாதங்களுக்கு சூரியனையே அண்டார்டிகாவில் பார்க்க முடியாது என்பதால் இதை “நீண்ட இரவு “Long Night” என்று அழைப்பார்கள். தற்போது அண்டார்டிகாவில் நீண்ட இரவு தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.