2025 வரை குறைவாக உண்ணுங்கள் என மக்களிடம் சொல்கிறாரா வட கொரிய அதிபர்!

வியாழன், 28 அக்டோபர் 2021 (10:51 IST)
வட கொரியாவில் இப்போது கடுமையான உணவுப்பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

உலக நாடுகளில் இருந்து தொடர்ந்து வட கொரியா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டே வருகிறது. முன்னதாக வடகொரியா ஆயுத சோதனைகள் நடத்தியதால் அமெரிக்காவுடன் மோதல் எழுந்துள்ள நிலையில், வடகொரியாவின் நடவடிக்கைகளை உலக நாடுகளும் கண்டித்து வருகின்றன.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா பரவிய நிலையிலும் தங்கள் நாட்டில் கொரோனா இல்லை என தொடர்ந்து வடகொரியா கூறி வந்த நிலையில், சமீபத்தில் தான் கொரோனா பாதிப்புகளை ஒத்துக் கொண்டது. இந்நிலையில் வடகொரியாவில் சூறாவளி, கொரோனா போன்ற காரணங்களால் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

இதையடுத்து இப்போது அதிபர் கிம் ஜாங் உன் மக்களை 2025 ஆம் ஆண்டுவரை குறைவாக சாப்பிட சொல்லி கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன,

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்