வானவில் நிறத்தில் கம்மல் அணிந்த பெண்ணுக்கு சிறை!

Sinoj

செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (13:46 IST)
ரஷ்யாவில்  வானவில் நிறத்தில் கம்மல் அணிந்த பெண்ணுக்குச் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் அதிபர் புதின் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், அங்கு தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் அதன் ஆதரவு செயல்பாடுகளுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் அந்த நீதிமன்றம் அளித்த உத்தரவில், தன்பாலின ஈர்ப்பு ஆதரவு அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகள் என அறிவித்தது.

தன்பாலின ஈர்ப்பாளர்களை  ஒடுக்கும் நடவடிக்கையில் அந்த நாடு ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், வானவில் நிறத்தில் கம்மல் அணிந்த பெண்ணுக்குச் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவின் நிஸ்னி  நவ்ஹொராட் என்ற பகுதியைச் சேர்ந்த அனஸ்டசியா எர்ஷொவா, பொது இடத்தில் வானவில் நிறத்தில் கம்மல் அணிந்துள்ளார்.

இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதில் அவருக்கு 5 நாட்கள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்ட நிலையில்,மொசினாவுக்கு 1500 ரூபெல் (இந்திய மதிப்பில் ரூ.1357) அபராதம் விதித்து, இவ்வழக்கை முடித்துவைத்து  அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்