டுவிட்டரில் லைக் பதிவின் கலர் மாறுகிறதா...? எலான் மஸ்க் அதிரடி !

வெள்ளி, 17 ஜூன் 2022 (18:40 IST)
டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்க பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் சம்மதித்தார். இதனையடுத்து அவர் டிவிட்டரை வாங்கினால் அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
 

இந்நிலையில் டிவிட்டரில் 20 - 50 % போலி கணக்குகள் இருப்பதாகவும் அதை  கணக்குகளை முடக்க உள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். ஆனால் டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால்,  5% குறைவாகவே போலி கணக்குகள் உள்ளதாக தெரிவித்தார். இதனால் முன்னர் இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. அதோடு சிஇஓ பராக் அகர்வாலை அவமதிக்கும் வகையிலும் எலான் மஸ்க் பதிவு ஒன்றை போட்டார். 

 பின்னர் டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் 5%  குறைவாக போலி கணக்குகள் இருக்கிறது என்பதன் ஆதாரத்தை பொதுவெளியில் வெளியிட மறுத்துவிட்டார். அதை அவர் நிரூபிக்கும் வரை டிவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என அதிரடியாக அறிவித்தார்  எலான் மஸ்க்.

இந்த நிலையில் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவது முடிவாகிவிட நிலையில், இன்று டுவிட்டர் எலான்மஸ்க் பெயரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. அதில், தற்போது ஒரு பதிவுக்கு உள்ள லைக் அழுத்தியவுடன் இருக்கும் சிகப்பு வண்ணம் எலான் மஸ்க் இந்த நிறுவனத்தை வாங்கியவுடன் இந்த லைக் சிம்மள் புளு வண்ணத்தில் மாறும் என்று நெட்டிசங்கள் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து நெட்டிசங்கள் காரசாரமாக விசாரித்து வருகின்றனர்.

Did you notice that @elonmusk changed the twitter LIKE button color from ❤️ to

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்