மேலும் அணு ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்த ஈரான், தற்போது ஈராக்கில் உள்ள அமெரிக்கா மற்றும் கூட்டணி படைகள் தளத்தின் மீது ராக்கெட்டுகளை ஏவி தாக்குதலை தொடர்ந்துள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து முழுமையாக தெரிய வரவில்லை.
இது குறித்து தனது ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், எல்லாம் நன்மைக்கே! ஈரான் ராணுவம் அமெரிக்காவில் உள்ள இரண்டு தளங்களை ராக்கெட்டால் தாக்கியுள்ளன. அமெரிக்க ராணுவத்திடம்தான் அதிநவீன ராணுவ தளவாடங்கள் உள்ளன. நாளை தாக்குதல் குறித்த அறிக்கையோடு வருகிறேன் என கூறியுள்ளார்.
இந்நிலையில் ஈரானின் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமெனி, சுலைமான் துணிச்சலான ராணுவ வீரர். அமெரிக்கர்களுக்கு எதிராகப் பாலஸ்தீன மக்களுக்கு உதவியவர் சுலைமான். சுலைமான் கொல்லப்பட்டதன் மூலம் நம்முடைய புரட்சி மீண்டும் புத்துயிர் பெற்று உலகிற்கு வெளிக்காட்டியுள்ளது.