அமெரிக்காவின் டெக்சாஸ், புளோரிடா மாகாணங்கள் மற்றும் கரீபிய கடலில் உள்ள தீவான போர்டோ ரிகாவை கடந்த ஆண்டு செப்டமபர் மாதம் மரியா என்னும் புயல் கடுமையாக தாக்கியது. 205 கி.மீ, வேகத்தில் சூறைக்காற்று வீசியதால் மரங்கள் மற்றும் குடியிருப்பு வீடுகள் சேதமடைந்தன. மேலும், அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த புயலால் 64 பேர் இறந்ததாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், 90 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏற்பட்ட உயிர்சேதம் என்றும் தெரிவித்தனர்.