ஹமாஸ் பயன்படுத்தும் ராக்கெட்டுக்கள் வடகொரியாவில் இருந்து கடத்தப்பட்டதா? அதிர்ச்சி தகவல்..!

வெள்ளி, 20 அக்டோபர் 2023 (10:38 IST)
வடகொரியாவின் எஃப்-7 ரக ஏவுகணைகளை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஹமாஸ் பயன்படுத்துகிறது என்று இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இந்த ஏவுகணைகள் வடகொரியாவிலிருந்து ஈரானுக்கு கடத்தப்பட்டு, அங்கிருந்து ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு இருக்கலாம் கூறப்படுகிறது.
 
இந்த ஏவுகணைகள் 120 கிலோமீட்டர் தூரத்திற்கு செல்லக்கூடியவை என்றும், 500 கிலோ வரை வெடிபொருளை சுமக்கக்கூடியவை என்றும், இதனால் இஸ்ரேலின் எல்லை நகரங்கள் வரை தாக்கப் பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.
 
இஸ்ரேல் ராணுவம் இந்த ஏவுகணைகளை எதிர்கொள்ளும் வகையில் தனது பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்தியுள்ளதாகவும், இருப்பினும் இந்த ஏவுகணைகள் இஸ்ரேலில் பல உயிர்களை பறித்துள்ள தாகவும் கூறப்படுகிறது.
 
ஹமாஸ் மற்றும் வடகொரியாவின் இடையேயான தொடர்புகள் பல ஆண்டுகளாக உள்ளதாகவும், வடகொரியா ஹமாஸுக்கு ஆயுதங்கள் மற்றும் பயிற்சியை வழங்குவதாகவும் ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் இருந்தது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்