பாராளுமன்றம் வந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே!

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (11:24 IST)
பொருளாதார நெருக்கடிக்கு இடையே அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று பாராளுமன்றம் வந்துள்ளார். 

 
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் ஏற்றுமதி, இறக்குமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கே திண்டாடும் நிலையில் பல பகுதிகளிலும் அரசை எதிர்த்து போராட்டங்களை தொடங்கி உள்ளனர். இதனால் இலங்கை அரசே கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
பொருளாதார நெருக்கடிக்கு இடையே, இலங்கையில் பாராளுமன்ற கூட்டமும் நடைபெற்று வருகிறது. பொருளாதார நெருக்கடி தொடர்பாக 3வது நாளாக விவாதம் நடைபெற்று வரும் நிலையில் இலங்கை பாராளுமன்றத்திற்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று வருகை தந்துள்ளார்.
 
பாராளுமன்றத்தில் அதிபர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று பாராளுமன்றம் வந்துள்ளார். பாராளுமன்ற விவாதத்தை கவனித்தும் வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்