கூகுள் ஹோம் பற்றித் தெரிந்துக்கொள்ளுங்கள்!

வெள்ளி, 7 அக்டோபர் 2016 (00:22 IST)
அக்டோபர் 4 ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நிறுவனங்களுக்குப் போட்டியாக கூகுள் நிறுவனம் தனது புதிய கருவிகளை அறிமுகம் செய்தது.


 
 
புதிய ஸ்மார்ட்போன்கள், உட்பட இன்னும் சில கருவிகளையும் அந்நிறுவனம் அறிமுகம் செய்தது. அவ்வாறு கூகுள் அறிமுகம் செய்த கருவிகளில் ஒன்று தான் கூகுள் ஹோம். இந்தக் கருவி இண்டர்நெட் மூலம் இணைக்கப்பட்ட உருண்டை வடிவ ஸ்பீக்கர் ஆகும்.
 
இதனை உங்களது குரல் மூலம் ஸ்விட்ச் ஆன் செய்ய முடியும். இது குரல் மூலம் இயக்கக்கூடிய ஸ்பீக்கர் மட்டும் கிடையாது. இக்கருவியிடம் கூகுள் தேடுபொறி போன்று நம் தேடல்களை கேள்விகளாகக் கேட்க முடியும். கேள்விகளை உள்வாங்கி, கூகுள் ஹோம் பதில் அளிக்கும்.
 
கேள்விகளைக் கண்டறிய கருவியின் மேல் இரண்டு மைக் பொருத்தப்பட்டுள்ளன. பேசுவுதை கூகுள் ஹோம் கேட்க வேண்டாம் என நினைத்தால் கருவியின் மேல் இருக்கும் மியூட் பட்டனை கிளிக் செய்யலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்