அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் வாக்கர் புஷ் காலமானார்!

Webdunia
சனி, 1 டிசம்பர் 2018 (12:00 IST)
அமெரிக்கா முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் ( ஜார்ஜ் எச்டபிள்யு புஷ்) உடல் நல குறைவு  காரணமாக காலமானார். 
ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்  1989 முதல் 1993 வரை அமெரிக்க அதிபராக இருந்தார். அதற்கு முன், 1981 முதல் 1989 வரை துணை அதிபராகவும் பதவி வகித்துள்ளார். புஷ் மனைவி பார்பரா கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் தான் காலமானார். 
 
இதனை தொடர்ந்து உடல்நலக்குறைவால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 1924 ஜூன் 12ல் பிறந்த புஷ்க்கு 5 குழந்தைகள் உள்ளனர். அவர் தனது 18 வயதில் அமெரிக்க கடற்படையில், இணைந்து பணியாற்றினார். எச்டபிள்யு புஷ்ஷின் மகன் ஜார்ஜ் டபிள்யு புஷ்ஷூம் அமெரிக்க அதிபராக இருந்தார்.
 
மேலும், இவர் அமெரிக்கா முன்னாள் அதிபர் ஜார்ஜ். டபிள்யூ.புஷ்ஷின் தந்தையாவார். ஹெச். டபிள்யூ புஷ் சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்