வெளிநாட்டு சைக்கிள் ஓட்ட வீரர்கள் கார் ஏற்றி படுகொலை

செவ்வாய், 31 ஜூலை 2018 (08:13 IST)
தஜிகிஸ்ஹான் நாட்டில் பயணம் செய்த வெளிநாட்டு சைக்கிள் ஓட்ட வீரர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டில் சைக்கிள் ஓட்ட வீரர்கள்  வெகுதூரம் சைக்கிளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது வழக்கம். அப்படி அமெரிக்கா, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்தை சேர்ந்த சைக்கிள் ஓட்ட வீரர்கள் 4 பேர் அவர்களது நாட்டிலிருந்து தஜிகிஸ்தான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு இருந்தனர்.
 
அப்படி அவர்கள் சைக்கிளில் பயணம் மேற்கொண்டிருந்தபோது வெவ்வேறு இடங்களில் அவர்கள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்டும் கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 3 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்துபோக ஒருவர் மருத்துவமனை அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார்.
 
இந்த கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.  இறந்துபோனவர்களில் 2 பேர் அமெரிக்காவையும் மற்ற 2 பேர் நெதர்லாந்து, சுவிட்சர்லாந்தை சார்ந்தவர்கள்.
 
இந்த கொடூரமான தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாமா என்ற கோணத்தில் தஜிகிஸ்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்