விமானங்கள் குண்டு வீச்சு: பொதுமக்கள் 28 பேர் பலி

ஞாயிறு, 17 ஜூலை 2016 (17:15 IST)
சிரியாவின் உள்நாட்டுப் போரில் விமானங்கள் குண்டு வீசியதில் பொதுமக்கள் 28 பேர் பலியாகி உள்ளனர்.


 
சிரியாவில் அதிபர் பாஷர் ஆசாத்துக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதில் சுமார் 2 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறி வெளிநாடுகளில் அகதிகலாக வாழ்ந்து வருகின்றனர். கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ நகரத்தை மீட்க சிரியா ராணுவம் தீவிரமாக போரிட்டு வருகிறது. அவர்களுக்கு ரஷியா ஆதரவாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று போர் விமானங்கள் அலெப்போ நகரம் மீது குண்டுமழை பொழிந்ததில் ஒரு குண்டு மருத்துவமனை கட்டிடத்தின் மீது விழுந்து வெடித்தது. இந்த தாக்குதலில் மருத்துவமனை கட்டிடம் இடிந்து சேதமடைந்தது ஊழியர்களும், நோயாளிகளும் காயம் அடைந்தனர். பல இடங்களில் இது போன்ற குண்டுவீச்சு தாக்குதல்கள் நடந்தன. அதில் பொதுமக்கள் 28 பேர் பலியாகினர். குழந்தைகள் உள்பட பலர் காயம் அடைந்தனர்.  என சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்