உலகில் முதல் முகமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் மரணம்: காரணம் என்ன?

புதன், 7 செப்டம்பர் 2016 (12:12 IST)
கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரெஞ்ச் நாட்டை சேர்ந்த இசபெல்லா டினேரி என்பவர் முக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். உலகின் முதல் முக மாற்று அறுவை சிகிச்சை இது என்பது குறிப்பிடத்தக்கது.


 
இசபெல்லா வளர்த்து வந்த நாய் ஒன்று அவரது முகத்தை கடித்தது. இதனால் முகம் விகாரமாக மாறியதை அடுத்து அவர் முக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

இந்த அறுவை சிகிச்சைக்கு பின் இசபெல்லாவுக்கு பக்க விளைவுகள் அதிகரித்தனர். மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அவர் மரணம் அடைந்தார். இந்த தகவலை இன்று ஏமியன்சில் உள்ள மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இசபெல்லியின் குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று இதுவரை அவர் மரணம் குறித்த தகவலை வெளியிடாமல் இருந்ததாகவும் மருத்துவமனை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக மாற்று அறுவை சிகிச்சையால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளை தடுக்க அவருக்கு அதிக வீரியம் மிக்க மாத்திரைகள் வழங்கப்பட்டதாகவும், அதனால் இசபெல்லாவுக்கு இரு கேன்சர் கட்டிகள் ஏற்பட்டதால் அவர் மரணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்