ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கேரளாவைச் சேர்ந்த அனில் மற்றும் அவருடைய மனைவி நீனு ஆகியோர் வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதிக்கு 4 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் திடீரென மின்சார பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. அப்போது நீனுவும் மற்றும் அவரது மகனும் தீயில் சிக்கி கொண்டனர். இதை பார்த்து படுக்கை அறையில் இருந்து பதறியபடி ஓடி வந்த அனில், மனைவியையும் மகனையும் காப்பாற்றுவதற்காக தன் உயிரையும் பொருட்படுத்தாது காப்பாற்றினார்.
இருவரையும் காப்பாற்றி விட்ட நிலையில் அனில் எதிர்பாராதவிதமாக தீயில் சிக்கிக்கொண்டார். இதில் அவருக்கு 90 சதவீத காயம் ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருக்கிறார். மனைவியையும் மகனையும் காப்பாற்ற தன் உயிரையும் பொருட்படுத்தாது செயல்பட்ட கணவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அவர் விரைவில் குணமாக சமூகவலைதள பயனாளிகள் பிரார்த்தனை செய்து வருகின்றனர் பிரபல துணிக்கடை காக பழமையான மரம் வெட்டப்பட்டது சென்னை பாண்டிபஜாரில் பரபரப்பில் சென்னை பாண்டிபஜார் சமீபத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீனமயமாக்க பட்டது என்பது தெரிந்ததே