மிரட்டி பார்த்த இந்தியா: ஆதரவில் பின்வாங்காத ஜஸ்டின் ட்ரூடோ!!

சனி, 5 டிசம்பர் 2020 (10:31 IST)
கனடா பிரதமர், மனித உரிமைகளுக்கான அமைதியான முறையில் எங்கு போராட்டம் நடந்தாலும் கனடா அதை ஆதரிக்கும் என பேச்சு. 
 
வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த சில நாட்களாக விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிரது. 
 
இந்நிலையில் இந்தப் போராட்டம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் ’இந்தியாவில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் பற்றி செய்திகள் கவலை அளிக்கிறது என்றும் அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க கனடா எப்போதும் துணை நிற்கும் என்றும் தெரிவித்திருந்தார். 
 
கனடா பிரதமரின் இந்த அறிவிப்புக்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்தது. இந்திய விவசாயிகள் குறித்து கனடா தலைவர்கள் தவறான தகவலை தெரிவித்துள்ளனர் என்றும் ஜனநாயக நாட்டில் உள் விவகாரத்தில் வேறொரு நாட்டின் கருத்து தெரிவிப்பது தேவையற்ற இது என்றும் இதனால் இருநாட்டுன் நல்லுறவு பாதிக்கப்படும் என்றும் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
ஆனால் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மனித உரிமைகளுக்கான அமைதியான முறையில் எங்கு போராட்டம் நடந்தாலும் கனடா அதை ஆதரிக்கும். பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை வரவேற்கிறேன். ஆனால் என் ஆதரவில் பின்வாங்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்