பாதாளத்தில் பயங்கரம்!! வாயைப்பிளந்த போலீஸார்; வில்லங்கமாய் சிக்கிய விவசாயி

புதன், 4 செப்டம்பர் 2019 (17:03 IST)
பாதாள அறைக்குள் ரூ.3.35 கோடி மதிப்பிலான கஞ்சா செடிகளை வளர்த்ததால் கைது செய்யப்பட்டுள்ளார் விவசாயி ஒருவர். 
 
டேனியல் பால்மர் என்பவர் லண்டன் டெப்ரோக்ஸ்டவ் பகுதியை சேர்ந்தவர். இவர் தனது தந்தைக்கு சொந்தமான நிலத்தில் விவசாய  கிடங்கு ஒன்றை கட்டி பாதாள அறைகளை அமைத்துள்ளார். அதோடு கிடங்கிற்கு மின்சார வசதியையும் செய்து வைத்திருந்துள்ளார். 
 
அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பலர் விளையும் காய்கறிகளையும் பழங்களையும் அந்த கிடங்கில் பாதுகாத்து வருகிறார் என நினைத்திருந்துள்ளனர். ஆனால், பாதாள அறைக்குள் கஞ்சா பயிரிட்டு இருந்துள்ளார். ஆம், இந்திய மதிப்பில் ரூ.3.35 கோடிக்கு கஞ்சா பயிரப்பட்டிருந்துள்ளது. 
 
இதை தெரிந்துக்கொண்ட போலீஸார் விவசாயிடம் விசாரித்த போது முதலில் கஞ்சா செடி வளர்ப்பு பற்றித் தெரியாது என கூறி வந்தவர் பின்னர் போலீஸாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து 6 வருடம் 3 மாதம் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்