ப்ளீஸ் திரும்பி வாங்க… பணி நீக்கம் செய்த ஊழியர்களுக்கு மீண்டும் அழைப்பு!

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2022 (10:34 IST)
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சிலரிடம் தவறுதலாக பணி நீக்கம் செய்துவிட்டோம் மீண்டும் பணிக்கு வரும்படி ட்விட்டர் கோரிக்கை.


பிரபலமான ட்விட்டர் நிறுவனத்தை உலக பில்லியனரான எலான் மஸ்க் வாங்கியது முதலாக பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முதலில் ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வால் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிய எலான் மஸ்க், பின்னர் ட்விட்டர் ஆலோசனை குழுவையும் கலைத்தார்.

ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 50 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளாராம் எலான் மஸ்க். இதற்கான பணிநீக்க பட்டியல் தயாராகியுள்ளதாகவும், பணி நீக்கம் செய்யப்பட உள்ளவர்களுக்கு இமெயில் மெமோ இன்று அனுப்பப்படும் என்றும் தகவல்கள் வெளியானது.

இதில், 50 சதவிகிதம் பேரை கடந்த 4-ம் தேதி ட்விட்டர் நிறுவனம் அதிரடியாக பணி நீக்கம் செய்தது. பணி நீக்கம் தொடர்பாக ட்விட்டர் ஊழியர்களுக்கு இ-மெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டது என கூறப்பட்டது. இந்நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் சிலரை மீண்டும் வேலைக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ட்விட்டர் நிறுவனம் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சிலரிடம் தவறுதலாக பணி நீக்கம் செய்துவிட்டோம் மீண்டும் பணிக்கு வரும்படி கேட்டுக்கொண்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 
 
Edited By: Sugapriya Prakash

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்