2 வகையான X தளத்தின் சந்தா திட்டம்: எலான் மஸ்க் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2023 (16:58 IST)
எலோன் மஸ்க் இரண்டு புதிய X பிரீமியம் சந்தாக்களை அறிவித்துள்ளார். அதில் ஒன்று குறைந்த விலையில் உள்ளது. இன்னொன்று அதிக விலை கொண்டது.

குறைந்த விலையிலான முதல் சந்தா திட்டத்தில் விளம்பரங்களுடன் அனைத்து அம்சங்களும் வழங்கப்படும். அதிக விலை கொண்ட 2வது சந்தா திட்டத்தில் விளம்பரங்கள் கிடையாது என எலான் மஸ்க் அறிவிப்பு செய்துள்ளார்.

இரண்டு புதிய X பிரீமியம் சந்தாக்கள் வெவ்வேறு வகையான வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டதாகவும் இருக்கும் என கருதப்படுகிறது. எடுத்துக்காட்டாக, குறைந்த விலை சந்தா சாதாரண பயனர்களை இலக்காக கொண்டிருக்கும் என்றும், அதே நேரத்தில் அதிக பிரீமியம் சந்தா பணக்கார பயனர்களை இலக்காகக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் இரண்டு புதிய X பிரீமியம் சந்தாக்கள் அறிமுகமாகியுள்ளதால்  வாடிக்கையாளர்கள் இனி X தளத்தை இலவசமாக பயன்படுத்த முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்