பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை உலக பில்லியனர் எலான் மஸ்க் வாங்கியது முதலாக அவரது செயல்பாடுகள் உலக அளவில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. ட்விட்டரை வாங்கியதும் அதன் முக்கிய பொறுப்பு அதிகாரிகளை பணியை விட்டு தூக்கிய எலான் மஸ்க், இனி ட்விட்டரில் ப்ளூடிக் பெறுவதற்கு மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் 650 ரூபாய்) கட்டணமாக செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளார்.
அதில் 8 டாலருக்கு ஸ்டார்பக்ஸ் காபி வாங்கும்போது சிரிப்பதாகவும், ப்ளூடிக்கிற்கு 8 டாலர் தருவதற்கு அழுவதாகவும் அவர் குறியீடாக காட்டியுள்ளார். அதிலும் உள்ளே புகுந்து கமெண்டில் அவரை பலர் விமர்சித்து வருகின்றனர்.