2017 ஆம் ஆண்டே டிவிட்டரை விலைக்கு கேட்ட எலான் மஸ்க்!

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (16:03 IST)
டிவிட்டர் குறித்த எலான் மாஸ்க்கின் பழைய டிவிட்டர் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 
உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் முக்கியமான இடத்தில் இருப்பது ட்விட்டர். சமீப காலமாக ட்விட்டர் நிறுவனத்தை வாங்க பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் முயன்று வருவதாக தகவல்கள் வெளியானது.
 
இதனைத்தொடர்ந்து பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் பிரபலமான சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கியது உலகம் முழுவதும் பெரும் பேசு பொருளாகியுள்ளது. எலான் மஸ்க் வாங்கியுள்ளதால் இனி ட்விட்டர் நிறுவனத்தின் நடவடிக்கைகள் எந்த வகையில் இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.
 
இந்நிலையில், எலான் மாஸ்க்கின் பழைய ட்விட்டர் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதாவது,  2017 ஆம் ஆண்டு எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் நான் ட்விட்டரை மிகவும் நேசிக்கிறேன் என்று கருத்து பதிவிட்டுள்ளார். அதற்கு டேவ் ஸ்மித் என்பவர் நீங்கள் அதை வாங்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். அதற்கு எலான் மஸ்க் ட்விட்டர் என்ன விலை? என்று பதிலுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். எலான் மஸ்க்கின் இந்த ட்விட் தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்