பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடித்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்! - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Prasanth Karthick

வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (13:20 IST)

அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்த ஆய்வில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது.

 

 

நமது அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக உள்ளது. மற்ற அலுமினிய, சில்வர் உள்ளிட்ட உலோக பொருட்களை விட பிளாஸ்டிக்கால் ஆன பொருட்கள் மலிவாக கிடைப்பதால் மக்கள் பலரும் பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். தண்ணீர் குடிப்பதற்கும் அவ்வாறாக பிளாஸ்டிக் பாட்டில்களையே அதிகம் பயன்படுத்துகிறோம்.

 

ஆனால் அவ்வாறாக பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தும்போது வெப்பமான பகுதியிலோ அல்லது மிகவும் குளிரான இடங்களிலோ பாட்டிலை வைக்கும்போது அதனால் மைக்ரோ ப்ளாஸ்டிக்குகள் தண்ணீருடன் கலப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறாக மைக்ரோ பிளாஸ்டிக் கலந்த தண்ணீரை அருந்துவதால் இதய பிரச்சினைகள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட பல உடல்நல ஆபத்துகள் ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

 

சமீபத்தில் இந்த மைக்ரோ ப்ளாஸ்டிக்குகள் ரத்த நாளங்களில் கலப்பதாகவும் இதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் மருத்தவ ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவுகளின்படி, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுவதாக கூறப்பட்டுள்ளது. எனவே முடிந்தளவு பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீர், குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்