கொரோனா தடுப்பூசிகள் ஆண்களின் கருவுறச் செய்யும் ஆற்றலை குறைக்கிறதா?

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (14:31 IST)
கொரோனா தடுப்பூசி கர்ப்பம் தரிப்பதை குறைக்கிறதா என அமெரிக்க நிபுணர் ஆராய்ந்து விளக்கம் அளித்துள்ளார்.

 
கொரோனாவுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியமாகியுள்ள நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பெண்கள் கருத்தரிப்பது, ஆண்களின் கருவுறச்செய்யும் ஆற்றலைக் குறைக்கிறது என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் தடுப்பூசி, கர்ப்பம் தரிப்பதை குறைக்கிறது என்பது தவறான தகவல். கர்ப்பம் தரிப்பதை தடுப்பூசிகள் குறைக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதே நேரத்தில் கொரோனா வைரசால் ஆண்களின் கருவுறச்செய்யும் ஆற்றல் சற்றே குறைகிறது. ஆனால் இந்த பிரச்சினை தற்காலிகமானது. அது கொரோனா தொற்று நோயுடன் தொடர்புடையது. தடுப்பூசியால் அல்ல என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்