1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.254 - எந்த நாட்டில் தெரியுமா?

செவ்வாய், 15 மார்ச் 2022 (11:04 IST)
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.254 ஆக உயர்ந்து உள்ளது. 

 
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளின் போர் காரணமாக உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் பெட்ரோல் விலையை 50 சதவீதத்துக்கு மேல் உயர்த்தி உள்ளது. 
 
இந்நிலையில் இலங்கையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.254 ஆக உயர்ந்து உள்ளது. டீசல் விலை ரூ.214 ஆக உள்ளது. அதோடு 24 கேரட் தங்க நாணயம் 1 சவரன் ரூ. 1.50 லட்சமாகவும் 22 கேரட்  ஆபரண தங்கத்தின் விலை 1 சவரன் ரூ. 1.38 லட்சமாகவும் உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. 
 
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. ஆம், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு -16.3% ஆக உள்ளதால் அந்த நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் உள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்