கொரொனா வைரஸ் உலக அளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 192 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. பல நாடுகளில் லாக் அவுட் முறை கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15,297 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,49,090 ஆக அதிகரித்துள்ளது. 1 லட்சத்திற்கு அதிகமனோர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், ஜெர்மனி பிரதமர் மெர்க்கலினுக்கு மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஏஞ்சலா மெர்க்கலுக்கு நிமோனியா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி போடப்பட்டுள்ளதை அடுத்து, மருத்துவரை சுற்றி இருந்தவர் என்ற வகையில் தற்போது மெர்க்கல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
வீட்டில் இருந்தபடியே மெர்க்கல் அலுவல்களை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு நோய்த்தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது