பல ஆண்டுகளாக சிகரெட் பழக்கம்... கறுப்பாக மாறிய நுரையீரல் ...அதிர்ந்த டாக்டர்கள் ! வைரல் வீடியோ

புதன், 20 நவம்பர் 2019 (19:45 IST)
சிகரெட் பழக்கம் உடலுக்குக் கேடு என்று சிகரெட் பாக்கெட்டுகளில் இருந்தாலுமே, யாருமே அதை மதிப்பதில்லை. அதனால் வரும் விபரீதங்களை மக்கள் உணருவதில்லை.
இந்நிலையில், சீனா நாட்டில், சுமார் 30 ஆண்டுகளாக தொடர்ந்து சிகரெட்  புகைத்துக்கொண்டிருந்த நபரின் நுரையீரல் கறுப்பு நிறமாக மாறியிருந்தது. அதைப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 
அந்த நபர், தான் இறந்த பின் தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக தெரிவித்திருந்தனர்.சமீபத்தில் அவர் உயிரிழந்ததை அடுத்து, அவரது உடலை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள், உள்ளுறுப்புகளை வெளியே எடுத்தனர்.
 
அப்போது,  இதுவரை யாருக்கும் இல்லாத வகையில், அந்த நபரிம் நுரையீரல் கரிந்த வடச்சட்டி போல் கறுப்பாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
 
அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவை பல லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்