இப்படியே தடை பண்ணுனா என்னங்க அர்த்தம்? – இந்தியாவின் தடையால் கடுப்பான சீனா!

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (15:53 IST)
இந்தியாவில் சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அலிபாபா நிறுவன செயலிகளுக்கும் தடை விதிக்கப்பட்டதற்கு சீனா கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லடாக் எல்லையில் சீன – இந்திய துருப்புகளிடையே ஏற்பட்ட மோதலால் இரு நாடுகளுக்கிடையேயான உறவு நிலையில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவிற்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக தொடர்ந்து சீன செயலிகளை இந்தியா தடை செய்து வருகிறது.

முன்னதாக ஜூன் மாதத்தில் 59 செயலிகளும், செப்டம்பர் மாதம் 118 செயலிகளும் தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 43 செயலிகளை இந்திய அரசு தடை செய்துள்ளது. இதில் அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தின் செயலிகளும் அடக்கம். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான செயலிகளை தடை செய்துள்ளதாக இந்தியா விளக்கமளித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் இந்த நடவடிக்கையால் இரு நாட்டு உறவுகளில் மேலும் இடைவெளி ஏற்படும் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்