எங்களுக்கும் ஆப்களை தடை செய்ய தெரியும்! – 4500 கேம்களை நீக்கிய சீனா!

Webdunia
செவ்வாய், 7 ஜூலை 2020 (08:53 IST)
சமீபத்தில் சீனாவின் 59 மொபைல் அப்ளிகேசன்களை இந்தியா தடை செய்த நிலையில் சீனாவும் 4,500 கேம் ஆப்களுக்கு தடை விதித்துள்ளது.

சீனாவில் ஆப்பிள் ஸ்டோரில் உள்ள சீனாவின் அனுமதி பெறாத 4,500 அப்ளிகேசன்களை ஆப்பிள் நிறுவனம் நீக்கியுள்ளது. மற்ற நாட்டு அப்ளிகேசன்களை சீனாவில் ஆப்பிள் பயனாளர்களுக்கு கொண்டு வரும் முன் சீன அரசின் அனுமதி பெற வேண்டும் என ஜூலை 1 முதல் திடீர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆண்டு ஒன்றிற்கு சீனா 1500 வெளிநாட்டு அப்ளிகேசன்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால் தற்போது அனுமதி பெறாமல் உள்ள 4,500 அப்ளிகேசன்களை ஆப்பிள் நிறுவனம் சீனாவில் பயன்பாட்டிலிருந்து நீக்கியுள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த இந்த ஆப்களில் பெரும்பாலானவை அமெரிக்காவை சேர்ந்தவை என்றும், இதில் சில இந்திய ஆப்களும் அடக்கம் என கூறப்படுகிறது.

அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக சீனா திடீரென இவ்வாறு முடிவெடுத்துள்ளதா என கேள்வி எழுந்துள்ளது. எனினும் ஆண்டுக்கு 1500 ஆப்களை அனுமதிக்கும் சீனா இந்த நாடுகளின் ஆப்களுக்கு அனுமதி அளிக்கிறதா என்பதை பொறுத்தே சீனாவின் நிலைபாடு தெரியவரும் என பலர் பேசி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்