டாட்டா காட்டிய ட்ரம்ப்: பாட்ஷாவான பில்கேட்ஸ்: WHO நிலை இதுதான்!!

செவ்வாய், 2 ஜூன் 2020 (10:27 IST)
WHO-வின் பெரிய கொடையாளராக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்சின் கேட்ஸ் ஃபவுண்டேசன் உருவெடுத்துள்ளது. 
 
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் குறித்த பல்வேறு தகவல்களை திரட்டி அதிலிருந்து மக்களை காக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது உலக சுகாதார அமைப்பு.   
 
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு மீது குற்றம் சாட்டிய ட்ரம்ப், உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அதனால் அந்த அமைப்புக்கு வழங்கும் நிதியை நிறுத்தப்போவதக கூறி அவ்வாரே செய்தார். 
 
இதனைத்தொடர்ந்து சீனா, உலக சுகாதார நிறுவனத்திற்கு வழக்கமாக வழங்கும் நிதியைவிட கூடுதல் நிதியை வழங்க துவங்கியது. ஆனால் இப்போது யாரும் எதிர்பாரா வகையில் உலக சுகாதார நிறுவனத்துடனான தொடர்பை துண்டித்துக்கொள்வதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.  அதாவது WHO லிருந்து வெளியேறியது அமெரிக்கா. 
 
அமெரிக்கா விலகியதையடுத்து WHO-வின் பெரிய கொடையாளராக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்சின் கேட்ஸ் ஃபவுண்டேசன் உருவெடுத்துள்ளது. ஐநாவின் ஒரு பகுதியான WHO-வில் தனியார் நிறுவனம் ஒன்று செல்வாக்கு மிக்கவராக உருவெடுத்திருப்பது இதுவே முதல் முறை. 
 
ஆனால், WHO-வில் தனியார் நிறுவனத்தின் செல்வாக்கு அதிகரித்திருப்பது உலக சுகாதார நிபுணர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்