கடந்த 1970 ஆம் ஆண்டுக்கு முன்பு, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த வங்கதேசத்தில், விடுதலை வேண்டி போர் வெடித்து, இறுதியில் விடுதலை கிடைத்தது. தனி சுதந்திர நாடாக உதயமானது.
அப்போது, வங்கதேசத்தின் விடுதலைக்கு எதிராகவும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாகவும் நிஜாமி தலைமையில் ஆயுதக் குழுவினர் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களில் ஈடுபட்டனர்.
இதற்காக, கடந்த 2009 ஆம் ஆண்டு வங்கதேச சர்வதேச போர்க்குற்ற நடுவர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு, நிஜாமி உள்பட 10-க்கும் மேற்பட்ட தலைவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணை முடிவில் 2014 ஆம் ஆண்டு நிஜாமிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.