ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இவர்கள் பழமை விரும்பிகளாக இருப்பதால், அங்குள்ள பெண்கள், சிறுமிகள் பொது இடங்களில் புர்கா அணியாமல் செல்லக்கூடாது, ப்ள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லகூடாது என கடுமையாக உத்தரவிட்டுள்ளனர்.
அத்துடன், ஈரான் நாட்டிலுள்ளதைப் போன்று, வெளியில் செல்லும்போது,ஹிஜாப் அணிய வேண்டும், வேலைக்குச் செல்லகூடாது என்ற உத்தரவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெண்கள் 6 ஆம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியாததால், ஐ நா சபையில், மனிதாபிமான பிரிவு தலைவர் மார்டின் உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரித்தனர்.