முன்னாள் பிரதமரும் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் மீது பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்டை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டில், பிரதமர் ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. கடந்தாண்டு முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக ஏப்ரல் மாதம் சுமார் 70 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதில், அவர் பிரதமராக இருந்தபோது, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து கிடைத்த பரிசுப் பொருட்களை அதிக விலைக்கு விற்றதக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, கடந்த மாதம் இறுதியில், லாசூர் நீதிமன்றம், இம்ரான்கானுக்கு ஜாமீனில் வெளிவரமுடியா பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்த உத்தரவை அடுத்து, இம்ரான்கான் வீட்டிற்குப் போலீசார் சென்றபோது, அவர் தலைமறைவானார்.
இதையடுத்து, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம்தேதி நடந்த பிரமாண்ட பேரணியின்போது, பாகிஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதிஜெபா சவுத்ரி மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த வழக்கு விசாரணையில் இம்ரான்கான் தொடர்ந்து ஆஜராகாமல் உள்ளார்.
இஸ்லாமாத் நீதிமன்றம் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத கைது வாரண்ட் பிறப்பித்தது.அதன்படி, வரும் 29 ஆம் தேதிக்குள் அவரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென்று போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், இன்று , லாகூரில் இம்ரான்கான் தலைமையில் தேர்தல் பேரணி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.