உலகில் பல நாடுகளில் கருக்கலைப்பு என்பது தண்டனைக்குரிய குற்றமாக இருந்து வருகிறது. சில நாடுகளில் மட்டுமே கருக்கலைப்புக்கு சட்டரீதியான அனுமதி உள்ள நிலையில் லத்தீன் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் கருக்கலைப்பு சட்டரீதியான அனுமதி அளிக்க கோரி பெண்ணிய அமைப்புகள் உள்ளிட்ட பலர் கோரிக்கை விடுத்துவந்தனர்.