கறுப்பு இனத்தவர் மீது துப்பாக்கி சூடு: போராட்டம் வெடித்தது; 4 போலீசார் பலி

வெள்ளி, 8 ஜூலை 2016 (13:17 IST)
அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர் ஒருவரை காவல் துறையினர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டம் வெடித்ததில் டல்லஸ் நகரில் காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 காவல் துறையினர் கொல்லப்பட்டனர்.


 

 
 
அமெரிக்கா நாட்டின் மின்னெசோட்டா மற்றும் லூயிசியானா மாநிலங்களில் கடந்த சில நாட்களில் காவல்துறை அதிகாரிகளால் இரண்டு கறுப்பின இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடெங்கிலும் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
 
அதில் டல்லஸ் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திடீரென்று துப்பாக்கி சூடு சத்தம் கேட்டு, ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்ட அனைவரும் அலறி அடித்து ஓடினர். அப்போது ஒரு கும்பல் காவல் துறையினர் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தயதில், சம்பவ இடத்திலே மூன்று காவல் துறையினர் இறந்தனர். மேலும் படுகாயம் அடைந்த ஒரு சிலர் மருத்துவமனையில் கவலைகிடமாக உள்ளனர். 
 
இந்த தாக்குதல் மூலம் மீண்டும் அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்று தெரிய வருகிறது. கறுப்பினத்தவர்களில் ஏழைகளாக உள்ளபவர்களை இன்றளவும் வெள்ளை இனத்தினர் தாழ்த்தப்பட்ட பார்வையில் தான் பார்க்கின்றனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்  

வெப்துனியாவைப் படிக்கவும்