கடலுக்குள்ளிருந்து வந்த வேற்றுக்கிரக உயிரினம்? வைரலான போட்டோவால் பரபரப்பு!

வெள்ளி, 16 டிசம்பர் 2022 (09:51 IST)
தென்னாப்பிரிக்காவில் கடற்கரையில் வித்தியாசமான உருவ அமைப்பில் உயிரினங்கள் சில நடந்து செல்வது போன்ற படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பூமியை போலவே வேறு சில கிரகங்களிலும் ஜீவராசிகள் வாழலாம் என அறிவியல் அறிஞர்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையை மையப்படுத்தி விதவிதமான ஏலியன் படங்கள் வெளியாகி ஹிட் அடித்தன. அதே சமயம் பூமிக்குள் ஏலியன்கள் மறைமுகமாக வாழ்கின்றன என நம்பும் மக்களும் இருக்கின்றனர்.

அவ்வபோது விசித்திரமான படங்கள், வீடியோக்களை பதிவிட்டு அது ஏலியன்களின் கைவரிசை என அவர்கள் பேசுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படம் வைரலாகியுள்ளது. தென்னாப்பிரிக்க கடற்கரையில் பல கால்களை கொண்ட வித்தியாசமான உருவங்கள் நடந்து செல்வது போல அந்த படத்தில் உள்ளது.

அவை ஏலியன்களாகதான் இருக்க வேண்டும் என பலரும் பேசி வருகின்றனர். ஆனால் அவை ஏலியன் அல்ல என்றும் காய்ந்த கற்றாழை செடிகள் கடற்கரையில் ஒதுங்கிய படமே அது என்றும் அந்த புகைப்படத்தை எடுத்த ஜான் வோர்ஸ்டர் தெரிவித்துள்ளார்.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்