கொழும்பு - திருச்சி விமானத்தை இயக்கிய பெண்கள்.. மகளிர் தினத்தில் ஒரு சாதனை..!
வியாழன், 9 மார்ச் 2023 (17:55 IST)
கொழும்பு - திருச்சி விமானத்தை இயக்கிய பெண்கள்.. மகளிர் தினத்தில் ஒரு சாதனை..!
நேற்று உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்ட நிலையை இந்த மகளிர் தினத்தில் கொழும்பிலிருந்து திருச்சி வந்த விமானத்தை முழுக்க முழுக்க பெண்கள் இயக்கி சாதனை செய்துள்ளனர்.
கொழும்பிலிருந்து திருச்சிக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் என்ற விமானத்தை முழுவதுமாகவே பெண்கள் இயக்கி உள்ள புகைப்படம் தற்போது வைரலாக வருகிறது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த விமானத்தில் உள்ள பைலட்டுகள் ஊழியர்கள் உள்பட அனைவருமே பெண்களாக இருந்தனர்.
இது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாக வருவதை அடுத்து பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி உள்ளனர் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.