அடுத்தடுத்து அலாஸ்காவில் தொடர் நிலநடுக்கம்! – மக்கள் பீதி!

வெள்ளி, 30 ஜூலை 2021 (09:41 IST)
அமெரிக்க மாகாணமான அலாஸ்காவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து மீண்டும் நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று அலாஸ்காவின் சாண்ட்பாயிண்ட் பகுதியிலிருந்து 4 மைல் தொலைவில் கடல்பகுதியில் உருவான சக்திவாய்ந்த நிலநடுக்கும் அலாஸ்காவின் பல பகுதிகளில் உணரப்பட்டதாக செய்திகள் வெளியானது. ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவான இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பின்னர் ஒரு மணி நேரத்தில் சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டதுடன் மக்களுக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என கூறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் நேற்று இரவு 8 மணியளவில் அலாஸ்காவின் சிக்னிக் நகரிலிருந்து தென்கிழக்கே 146 கி.மீ தொலைவில் ரிக்டர் அளவில் 5.5 ஆக நிலநடுக்கும் ஒன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து அலாஸ்காவின் வெவ்வேறு பகுதிகளில் நிலநடுக்கும் ஏற்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்