ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 255 ஆக உயர்வு!

Webdunia
புதன், 22 ஜூன் 2022 (12:16 IST)
ஆப்கானிஸ்தானில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலியாகியோரின் எண்ணிக்கை 255 ஆக உயர்ந்ததாக தகவல். 

 
தாலிபான் ஆட்சி நடந்து வரும் ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள கோஸ்ட் சிட்டி என்ற பகுதியில் இன்று காலை பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பாகிஸ்தான் வரை உணரப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
கோஸ்ட் சிட்டிக்கு கீழே 51 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் குடியிருப்புகள், கட்டிடங்கள் பல இடிந்து தரை மட்டமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 130 பேர் வரை இறந்திருக்கலாம் என்றும் 300க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை குழு அதிகாரிகள் தெரிவித்தனர். 
 
ஆனால் தற்போது பலி எண்ணிக்கை  255 ஆக உயர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்