100 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது

புதன், 1 ஆகஸ்ட் 2018 (07:53 IST)
மெக்சிகோவில் 100 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டுராங்கோவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து ஏரோமெக்சிகோ என்ற விமானம் 97 பயணிகள், 4 ஊழியர்கள் என 101 பேருடன் மெக்சிகோவை நோக்கி புறப்பட்டது. விமானம் புறப்படத் தொடங்கி சில வினாடிகளிலே விபத்துக்குளாகி விமானம் தீப்பிடித்து எரிந்தது.
 
உடனடியாக அங்கு வந்த மீட்புத் துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 85 பேர் காயமடைந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்