உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா, பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரிய நிறுவனங்கள் பல தங்கள் பணியாளர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இதனால் பலரும் எப்போது தங்கள் வேலை பறிப்போகுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
ஆனால் சீனாவை சேர்ந்த ஹெனன் மைன் என்ற நிறுவனமோ இந்த இக்கட்டான காலகட்டத்திலும் பெரும் லாபம் ஈட்டியுள்ளது. கிரேன் உள்ளிட்ட பளு தூக்கும் கனரக வாகனங்கள், எந்திரங்களை தயாரிக்கும் இந்நிறுவனம் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிற்கு தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது.
அதில் சுமார் 61 மில்லியன் சீவ யுவான் பணத்தை மலை போல குவித்து வைத்து தனது ஊழியர்களுக்கு போனஸை அள்ளிக் கொடுத்துள்ளது. நிறுவனத்தின் உயர்வுக்காக சிறப்பாக செயல்பட்ட 3 மேலாளர்களுக்கு தலா 5 மில்லியன் யுவான்களும், மற்ற ஊழியர்களுக்கு 1 மில்லியன் யுவான்களையும் வழங்கியுள்ளது. கைநிறைய போனஸ் பணத்தை அள்ளிக் கொண்டு ஊழியர்கள் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.