இந்தியாவைப் போன்று கொரோனாவை தடுக்க அமெரிக்க அதிபர் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும், கொரொனா பாதிப்பால் சுமார் 5 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். சுமார் 33 லட்சம் பேர் உதவித்தொகை கேட்டுவிண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில்,அங்கு ஏராளமானோர் வேலை யிழந்துள்ள நிலையில், வெளிநாட்டில் இருந்து வேலைக்கு வருபவர்களை பணி அமர்த்துவதற்கான எச் 1 பி விசாக்கள் வழங்குவதை நிறுத்தக் கோரி யுஎஸ் டெக் ஒர்க்கர்ஸ் என்ற அமைப்பு அதிபர் டொனால்ட் டிரம்புக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.