இளசுகளை அதிகரிக்க அமலுக்கு வரும் புதிய திட்டம்!

வெள்ளி, 2 நவம்பர் 2018 (15:53 IST)
இத்தாலி அரசு மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக தம்பதியினர் அனைவரும் மூன்று குழந்தைகளை கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என சட்டம் கொண்டுவர உள்ளதாக தெரிகிறது. 
 
இத்தாலி உள்ளிட்ட மேலை நாடுகளில் மக்கள் தொகையில் 60% அதிகமான முதியோர்கள் உள்ளனர். இதனால், அந்நாட்டில் இளைய தலைமுறையினரின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய திட்டம் ஒன்று அமலுக்கு வரவுள்ளது.
 
ஆம், இத்தாலி அரசு மக்கள் தொகையை அதிகரிக்கும் பொருட்டு மூன்று குழந்தைகள் பெற்று கொள்பவர்களுக்கு இலவச நிலம் வழங்கப்படும் என்ற புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது. 
 
கடந்த 2017 ஆம் ஆண்டின் பிறப்பு விகிதத்தின் படி இத்தாலியில் கடந்த ஆண்டு 4 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன. இது 2016 ஆம் ஆண்டை விட 2% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்