உலக கொரோனா பாதிப்பு 3.56 கோடியாக உயர்வு!

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (07:19 IST)
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 3,56,92,636 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், கொரோனாவில் இருந்து 2,68,58,407 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 10,45,826 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிற்கு ஆளான 7,78,8,418 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,679,644 எனவும், பலியானோர் எண்ணிக்கை 215,032 எனவும், குணமானவர்களின் எண்ணிக்கை 4,895,078 எனவும் உயர்ந்துள்ளது.
 
இதேபோல் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,682,073 எனவும், பலியானோர் எண்ணிக்கை 103,600 எனவும், குணமானவர்களின் எண்ணிக்கை 5,659,110 எனவும் உயர்ந்துள்ளது. 
 
இதேபோல் பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,940,499 எனவும், பலியானோர் எண்ணிக்கை 146,773 எனவும், குணமானவர்களின் எண்ணிக்கை 4,295,302 எனவும் உயர்ந்துள்ளது
 
ரஷ்யா, கொலம்பியா, பெரு, ஸ்பெயின், அர்ஜெண்டினா, மெக்சிகோ மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதல் பத்து இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்