புத்தாண்டு பிறந்தது; உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் கொண்டாட்டம்!
சனி, 31 டிசம்பர் 2022 (17:02 IST)
இந்தியா உள்பட உலகம் முழுவதும் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் நியூசிலாந்து நாட்டில் சற்றுமுன் உலகிலேயே முதல் நாடாக புத்தாண்டு கொண்டாடும் நாடாக அமைந்துள்ளது
நியூசிலாந்து நாட்டில் சற்றுமுன் நள்ளிரவு 12 மணி ஆனதை அடுத்து அந்நாட்டில் புத்தாண்டு பிறந்து உள்ளது. இதனையடுத்து அந்நாட்டில் உள்ள பொதுமக்கள் சாலைகளில் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறிக்கொண்டு கொண்டாடி வருகின்றனர்
இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறக்க உள்ளது என்றும் அதன் பிறகு அடுத்தடுத்த ஒவ்வொரு நாட்டிலும் புத்தாண்டு பிறக்க உள்ளது என்பது குறிபிடத்தக்கது.
இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு வரவுள்ளதை அடுத்து புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இந்தியர்கள் தயாராகி வருகின்றனர்.