நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் பிரபலமான வெப் சிரிஸில் ஒன்று ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ். இதுவரை 3 சீசன்கள் வெளியாகியுள்ள இந்த தொடரின் நான்காவது சீசன் இன்று வெளியாகிறது. இந்த வெப் சிரிஸின் முந்தைய சீசன்கள் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் சமீபத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.