அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை போட்டு பிறகு நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் நன்றாக வதங்கும் வரை கிளறி, பின்னர் வெங்காயம் வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்குங்கள்.
ஒரு 2 நிமிடங்கள் வதக்கிய பிறகு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து விடுங்கள். தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் மசாலா பொடிகளான மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள் இவைகளை போட்டு நன்றாக வதக்குங்கள்.
காளான் தொக்கு சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி, சாதம், இடியப்பம் போன்ற பொருட்களுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.