தேங்காய் துருவலை மிக்ஸ்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். டிரேயில் ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி எல்லா இடங்களிலும் படும்படி தடவி வைக்கவும். அடுப்பில் ஒரு நான்ஸ்டிக் கடாயை வைத்து தேங்காய் துருவல், சர்க்கரை, பால் அல்லது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
அடுப்பை சிம்மில் வைத்து கிளற ஆரம்பிக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக வற்ற ஆரம்பிக்கும். அடி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும். பிடித்தால் ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்து கிளறவும். இப்போது ஏலக்காயை சேர்த்துக் கொள்ளவும். நன்றாக வற்றி சுருண்டு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
நெய் தடவிய டிரேயில் பரப்பி விடவும். நன்றாக ஒரு தோசை கரண்டியை வைத்து அழுத்தி பரப்பி கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்து பர்பி லேசான சூட்டில் இருக்கும் போது ஒரு கத்தியை வைத்து துண்டுகளாக கட் செய்து கொள்ளுங்கள். சுவையான தேங்காய் பர்பி தயார்.