செய்முறை:
புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டிக்கொள்ளவும். வெறும் வாணலியில் கண்டந் திப்பிலி, துவரம் பருப்பு, தனியா, மிளகாய் வற்றல், மிளகு, சீரகம் சேர்த்து வறுத்து எடுக்கவும். அதனுடன் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.
புளிக்கரைசலுடன் உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். புளியின் பச்சை வாசனை போன பிறகு சுக்குத்தூள், அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். ரசம் நுரைத்து வரும் போது இறக்கவும்.