செய்முறை:
முதலில் காளானை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவேண்டும். வெங்காயம், தக்காளியையும் நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு எல்லாவற்றையும் லேசாக வறுத்து சிறிது நேரம் ஆறவிடவும். ஆறிய பின்னர் கொத்தமல்லி சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
தேங்காய் மற்றும் சின்ன வெங்காயத்தை தனியாக அரைத்து கொள்ளவும். காடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, சோம்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் காளான் மற்றும் அரைத்த மசாலா, மஞ்சள் தூள், உப்பு இவற்றுடன் 200 மி.லி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.