குக்கரில் நறுக்கிய சுரைக்காய் துண்டுகளைச் போடவும். வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் சதுரங்களாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, கடுகு சேர்த்து தாளித்து, குக்கரில் உள்ள சுரைக்காய் துண்டுகளுடன் தாளித்தக் கலவையைச் சேர்க்கவும். பின் குக்கரில் தனியாப் பொடி, சீரகப் பொடி, வத்தல் பொடி, மஞ்சள் பொடி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
சுரைக்காய் கலவையுடன் மசாலாப் பொருட்களைச் சேர்த்ததும், குக்கரில் 3 குழிக்கரண்டி தண்ணீர் சேர்க்கவும். பின் சுரைக்காய் கலவையை நன்கு கிளறி குக்கரை மூடி விடவும். குக்கரில் விசில் வந்ததும் அடுப்பின் தணலை சிம்மில் வைக்கவும். இரண்டு நிமிடங்கள் கழித்து குக்கரை அணைத்து விடவும். குக்கரின் ஆவி அடங்கியதும் குக்கரை திறக்கவும்.